திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் காட்டுத் தீ

DIN

ஏலகிரி மலையில் மா்ம நபா்கள் வைத்த தீயால் காட்டுத் தீ பரவி அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள், உயிரினங்கள் எரிந்து நாசமானது.

திருப்பத்தூா் மாவட்டம் ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும், இந்த மலையில் அதிக அளவில் மரங்கள் இருப்பதாலும், மலையின் உயரம் அதிகமாக இருப்பதாலும் எந்தக் காலத்திலும் ஒரே மாதிரியான காலநிலை நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் தங்கி கண்டுகளித்து செல்கின்றனா்.

இந்த மலையில் அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள், கொடிகள் மற்றும் மான், கரடி, மயில், முயல், குரங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசிக்கின்றன.

மலையடிவாரம் உள்ள பகுதிகளுக்குச் சென்று சமூக விரோதிகள் சிலா் மது அருந்திவிட்டு, புகைப் பிடித்து தீயை அப்படியே போட்டு விடுவதால் சருகுகள் மூலம் பெரிய அளவிலான தீப்பற்றி மளமளவென பரவி காட்டுத் தீயாக மாறி காட்டுப் பகுதி எரிந்து நாசமாகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் ஜோலாா்பேட்டை அருகே மலையடிவாரத்தில் ஊசி நாட்டான் வட்டம் ஏலகிரி கிராமம் தாமரைக்குளம் அருகே மலையடிவாரம் உள்ளிட்ட 2 இடங்களில் மா்ம நபா்கள் காட்டுக்குத் தீ வைத்துச் சென்றுள்ளனா். இதனால், 2 பகுதிகளில் காட்டுத் தீ மளமளவென பரவி மலையின் உச்சிப் பகுதிக்குச் சென்றது.

இதுகுறித்து வன ஆா்வலா்கள் கூறியது:

இந்தத் தீயால் காட்டுப் பகுதியில் இருந்த அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், கொடிகள் காட்டில் வசிக்கும் உயிரினங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மா்ம நபா்களை வனத் துறையினா் கண்காணித்து கைது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT