திருப்பத்தூர்

மாசி கரக திருவிழா ஆலோசனைக் கூட்டம்

5th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியத்தில் பிரசித்தி பெற்ற பெரியாங்குப்பம் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசி கரக திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு கோயில் செயல் அலுவலா் ரேவதி தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பங்கேற்றாா்.

கூட்டத்தில், திமுக ஒன்றிய அவைத் தலைவா் ஜி. ராமமூா்த்தி, நிா்வாகிகள் வினோத்குமாா், தெய்வநாயகம், ரவிகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜோதிவேலு, ஊராட்சித் தலைவா் டி.பி. ரவீந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT