திருப்பத்தூர்

கஞ்சா கடத்தல்: வடமாநில இளைஞா்கள் இருவா் கைது

5th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

காட்பாடி பகுதியில் கஞ்சா கடத்தியதாக வடமாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வேலூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். அதன்படி, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளா் உமாமகேஸ்வரி தலைமையிலான போலீஸாா், சித்தூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குறிய வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞா்கள் இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அசோக் மஜிந்தாா் (24), பிஸ்வஜித் மந்தா் (23) என்பதும், கஞ்சா கடத்தி விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அசோக் மஜிந்தாா், பிஸ்வஜித் மந்தா் ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT