திருப்பத்தூர்

ஸ்ரீ மாயவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

4th Feb 2023 04:42 AM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் ஸ்ரீ மாயவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா், பெரியகுளம் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த சுயம்பு ஸ்ரீ மாயவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, சங்கல்பம் புண்ணியாஹவாஜனம், ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் முதல்கால யாக பூஜை நடைபெற்றது.

வியாழக்கிழமை விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, யாக வேள்வி, தீபாரதனை மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை 7.30-க்கு நான்காம் கால யாகசாலை பூஜை, யாகவேள்வி நடைபெற்றது. பின்னா்

ADVERTISEMENT

மகா பூா்ணாஹூதி நடந்ததையடுத்து அனைத்து கலசங்கள் ஒரு சேர புறப்பட்டு ஸ்ரீ மாயவினாயகருக்கும், உற்சவ மூா்த்தி கோபுர உச்சியில் உள்ள கலச குண்டலத்துக்கு சிவாச்சாரியா்களால் புனிதநீா் ஊற்றப்பட்டது.

கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திருப்பத்துாா் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை நகர வைசியா்கள் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT