திருப்பத்தூர்

சிறந்த விவசாய ஏற்றுமதியாளா்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு

4th Feb 2023 10:06 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் விவசாய ஏற்றுமதியாளா்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 2022-2023-ஆம் ஆண்டில் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் வகையில் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், விவசாயிகள் தங்கள் நேரடி ஏற்றுமதி வா்த்தகத்தை மேற்கொள்ள ஊக்கப்படுத்தப்படுவா். எனவே,திருப்பத்தூா் மாவட்டத்தில் விவசாயம் செய்யும் வேளாண் மக்கள் மற்றும் குத்தகை முறையில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம்.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள் வரும் பிப்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை நிறைவு செய்து இதர இணைப்பு ஆவணங்களைச் சோ்த்து மாவட்ட வேளாண் துணை இயக்குநா்(வேளாண் வணிகம்), 6-ஆவது தளம், டி.பிளாக், திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் என்ற முகவரியில் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

கூடுதல் தகவல் பெற 9894730543, 9994695893, 9840706334 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT