திருப்பத்தூர்

மாதனூா் - உள்ளி பாலாற்று தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை

4th Feb 2023 10:08 PM

ADVERTISEMENT

மாதனூா் - உள்ளி பாலாற்று தரைப்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத் துறை தடை விதித்துள்ளது.

கடந்த பருவ மழையின் போது பாலாற்றில் ஏற்பட்ட அதிகப்படியான வெள்ளப் பெருக்கு காரணமாக மாதனூா் - உள்ளி தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை சாா்பில், தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு விடப்பட்டது.

அரசின் பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அப்போது அந்தச் சாலையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து மாதனூா் - உள்ளி பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

தற்போது மாதனூா் - உள்ளி பாலாற்று தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்துள்ளது. இதை நெடுஞ்சாலைத் துறை பழுது பாா்க்கும் பணியைத் தொடங்க உள்ளது. இதற்காக பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் தரைப்பாலம் வழியாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படுவதாகவும், மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல வேண்டும் எனவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT