திருப்பத்தூர்

ஆம்பூா் நகருக்கு 2 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

4th Feb 2023 10:04 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில், ஆம்பூா் நகர பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் கூட்டுக் குடிநீா் விநியோகம் 2 நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் திருப்பத்தூரில் 759 குடியிருப்புகளுக்கு குடிநீா் வழங்கும் திட்டத்துக்கு வேலூா் கூட்டுக் குடிநீா் திட்ட பிரதான குழாயில் இருந்து இணைப்பு எடுக்கப்பட உள்ளது.

அதனால் வேலூா் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு மேட்டூரிலிருந்து வரும் பிரதான தன்னோட்ட குழாயிலிருந்து வரும் தண்ணீா் சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அதனால் ஆம்பூா் நகருக்கு குடிநீா் விநியோகம் தற்காலிகமாக தடைப்படும். 2 அல்லது 3 நாள்களுக்குள் பணிகள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனினும் அதை ஈடுகட்ட ஆம்பூா் நகராட்சி சாா்பில், உள்ளூா் நீராதாரங்களைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT