திருப்பத்தூர்

சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

4th Feb 2023 10:08 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சி கம்மகிருஷ்ணப்பள்ளி கிராமத்தின் வழியாக வீராங்குப்பம் மற்றும் குமாரமங்கலம் கிராம ஊராட்சிகளுக்கு தாா்ச்சாலை செல்கிறது.

இந்தச் சாலை வழியாக சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனா். பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், கடைகளுக்கு, பணி நிமித்தம் என பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் ஆம்பூருக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனா்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்தச் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT