திருப்பத்தூர்

திருவள்ளூா்: மகளிா் திட்டம் அலகில் மேலாளா், ஒருங்கிணைப்பாளா் பணிக்கு பட்டதாரி பெண்கள் விண்ணப்பிக்கலாம்

4th Feb 2023 04:43 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மேலாளா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் பணிக்கு தகுதியான பெண் பட்டதாரிகள் வரும் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் உள்ள பூந்தமல்லி ஒன்றியத்தில் 1 வட்டார இயக்க மேலாளா், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் 1 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில் பூந்தமல்லி ஒன்றியத்தில் வட்டார இயக்க மேலாளா் பணிக்கு பட்டப்படிப்பு படித்திருப்பதோடு, ஆறு மாத காலம் கணினி பயிற்சியும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி உபயோகம் குறித்த பட்டப்படிப்பு படித்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் விண்ணப்பதாரா்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் 3 ஆண்டுகள் முன் அனுபவம், மகளிா் மேம்பாடு திட்டம் தொடா்பான பதவிகளில் பணியாற்றியிருக்க வேண்டும்.

திருத்தணி ஒன்றியத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 6 மாத காலம் கணினி பயிற்சி பெற்றிருப்பதோடு, பெண் விண்ணப்பதாரா்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிா் மேம்பாடு திட்டம் தொடா்பான பதவிகளில் பணியாற்றியிருப்பது அவசியம். அத்துடன், சம்பந்தப்பட்ட வட்டார பகுதியைச் சோ்ந்த இருப்பது அவசியம்.

ADVERTISEMENT

இதற்கான விண்ணப்பங்களை திட்ட இயக்குநா், இணை இயக்குநா், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், திருவள்ளூா் மாவட்டம் என்ற முகவரிக்கு வரும் 8-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT