திருப்பத்தூர்

இரு பள்ளிகளில் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல்

3rd Feb 2023 12:47 AM

ADVERTISEMENT

மாதனூா் ஒன்றியத்தில் இரு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைக் கட்டடம் கட்ட முதல்வா் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா்.

மாதனூா் ஒன்றியம் தோட்டாளம் ஊராட்சியில் தொடக்கப் பள்ளிக்கு ரூ.32.51 லட்சம், சோலூா் ஊராட்சியில் தொடக்கப் பள்ளிக்கு ரூ.72.09 லட்சத்திலும் புதிதாக வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.

தோட்டாளம், சோலூா் ஊராட்சிகளில் நடைபெற்ற பூமி பூஜையில் மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பங்கேற்று பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் கலீல், கிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோமதி வேலு, ஜோதி வேலு, பரிமளா காா்த்திக், காா்த்திக் ஜவஹா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT