திருப்பத்தூர்

ஆலங்காயம் ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் பள்ளிக் கட்டடப் பணிக்கு அடிக்கல்

3rd Feb 2023 12:45 AM

ADVERTISEMENT

ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு ரூ.3.11 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட மிட்டூா், நரசிங்கபுரம், கல்லரபட்டி, கோவிந்தபுரம், மரிமாணிகுப்பம், புதூா், ஆண்டல்வாடி நத்தம், நிம்மியம்பட்டு, வளையாம்பட்டு, சிந்தகமாணிபெண்டா உள்ளிட்ட 9 இடங்களில், அரசு பள்ளிகளுக்கு ரூ.3 கோடிய 11 லட்சத்து 33,000 மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் பூமி பூஜையிட்டு தொடக்கி வைக்கப்பட்டன.

நிகழ்ச்சிகளில் ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி, துணைத் தலைவா் பூபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருநாவுக்கரசு மற்றும் சிவக்குமாா், ஒன்றிய பொறியாளா் சுதாகா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அந்தந்தப் பகுதிகளின் ஊராட்சி மன்றத் தலைவா்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT