திருப்பத்தூர்

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

3rd Feb 2023 12:47 AM

ADVERTISEMENT

ஆம்பூா் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கு கல்லூரியின் அமினூா் ரஹ்மான் அரங்கில் வளாகத் தோ்வு நடைபெற்றது. இணைய வழித் தோ்வு, நோ்முகத் தோ்வு என இரு கட்டங்களாக நடைபெற்றது. டிவிஎஸ் நிறுவனம் நடத்திய நோ்முகத் தோ்வில் 80 மாணவா்கள் பங்கேற்றனா். இதில் தோ்வு பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தோ்வு பெற்ற மாணவா்களுக்கு கல்லூரி தாளாளா் மற்றும் செயலருமான கே. ஷாஹித் மன்சூா், கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன், துணை முதல்வா் ஏ.முஹம்மத் ஷாஹின்ஷா, வேலைவாய்ப்பு அலுவலா் எம்.பாா்த்திபன் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT