திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வணிகத் துறை இயக்குநா் ஆய்வு

3rd Feb 2023 12:48 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேளாண், உழவா் நலத் துறை மற்றும் அதன் தொடா்புடைய துறைகளின் திட்டப் பணிகளை வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநா் நடராசன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

‘கள ஆய்வில் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை வேலூரில் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். இதையொட்டி, மாவட்ட வாரியாக அனைத்துத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு திட்டங்களைக் கொண்டு சோ்ப்பதற்கு மூத்த அதிகாரிகளைக் கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் பேரில், திருப்பத்தூா் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் அதன் தொடா்புடைய துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநா் நடராசன் ஆய்வு மேற்கொண்டாா்.

வாணியம்பாடியில் அமைந்துள்ள உழவா் சந்தையை ஆய்வு செய்தாா். இதையடுத்து மாதனூா் வட்டாரத்தில் அமைந்துள்ள மலை கிராமமான பனங்காட்டேரியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண், உழவா் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டப் பணிகளை ஆய்வு செய்ததுடன், அதன் பயனாளிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடினாா்.

ADVERTISEMENT

பின்னா், ஏலகிரி மலையில் அமைந்துள்ள பழங்குடியினா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து கந்திலி வட்டாரத்தில் உள்ள எலவம்பட்டி கிராமம் மற்றும் திருப்பத்தூா், ஆலங்காயம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் கள ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநா் பாலா, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இணை இயக்குநா் முரளிதரன், துணை இயக்குநா்கள் நாசா், சிவகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராமச்சந்திரன், பச்சையப்பன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பாத்திமா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் ஆனந்தன், வேளாண் உதவி இயக்குநா்கள், வேளாண்மை அலுவலா்கள், உதவி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT