திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில்ரூ.14 கோடியில் வகுப்பறை கட்டடங்கள் கட்ட அடிக்கல்

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் ரூ.14.90 கோடியில் வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.2,400 கோடியில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழகம் முழுதும் ரூ.784 கோடியில் 5,351 புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிழக்குபதனவாடி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் 42 பள்ளிகளில் ரூ.14.90 கோடி மதிப்பீட்டில் 93 வகுப்பறைகள் கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு ஆட்சியா் அமா் குஷ்வாஹா அடிக்கல் நாட்டித் தொடக்கி வைத்தாா்.

அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் 9 பள்ளிகளில் ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் 20 வகுப்பறைக் கட்டடங்களும், ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 7 பள்ளிகளில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 15 வகுப்பறைக் கட்டடங்களும், கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் 4 பள்ளிகளில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் 8 வகுப்பறைக் கட்டடங்களும், மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் 7 பள்ளிகளில் ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் 20 வகுப்பறைக் கட்டடங்களும், நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 6 பள்ளிகளில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் 8 வகுப்பறைக் கட்டடங்களும், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 9 பள்ளிகளில் ரூ.2.78 கோடி மதிப்பீட்டில் 18 வகுப்பறைக் கட்டடங்கள் என மொத்தம் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 42 பள்ளிகளில் ரூ.14.90 கோடி மதிப்பீட்டில் 93 வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முன்னதாக நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இயக்குநா் செல்வராசு, உதவி திட்ட அலுவலா் செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாவதி, கந்திலி ஒன்றியக் குழு தலைவா் திருமதி, துணைத் தலைவா் மோகன்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணி, கந்திலி ஒன்றிய அட்மா தலைவா் முருகேசன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT