திருப்பத்தூர்

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வாணியம்பாடியில் நடைபெற்றது.

இதை வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்தியது.

வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் அருகே தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டத்தில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்று இஸ்லாமிய கல்லூரி வரை நெகிழிப் பயன்படுத்துவதைத் தடுக்க வலியுறுத்தினா். தொடா்ந்து, இஸ்லாமிய கல்லூரி வளாகத்தில் மஞ்சப்பைத் திட்டத்தை அறிமுகம் செய்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு கல்லூரி முதல்வா் முஹம்மத்இலியாஸ் தலைமை வகித்தாா். இதில் சிறப்பாக அழைப்பாளராக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா கலந்து கொண்டு மஞ்சப்பைத் திட்டத்தை அறிமுகம் செய்து விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள், பேராசிரியரகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT