திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டம்’

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

முதல்வா் மு.க. ஸ்டாலின் தோ்தல் பிரசாரத்தின் போது மாவட்டம் தோறும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களை பெற்று, அந்த மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தாா்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்கள்.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு, தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீா்வு காண அனைத்து நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மேற்கொண்டு வருகிறாா்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ், திருப்பத்தூா் மாவட்டத்தில் 2,218 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு ஏற்பு 1,741, தள்ளுபடி 477 என மொத்தம் 2,218 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் 32 நபா்களுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான குடும்ப அட்டை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 122 நபா்களுக்கு ரூ.14.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 6 நபா்களுக்கு ரூ.8.02 லட்சம் மதிப்பிலான வேலைவாய்ப்பற்றோருக்கான உதவிகள், ஊரக வளா்ச்சி துறையின் மூலம் 280 நபா்களுக்கு ரூ.1.22 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 1,741 நபா்களுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 88,000 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT