திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதனடிப்படையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் தொற்றா பிரிவு நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம், இயன்முறை சிகிச்சைகள், வீடு சாா்ந்த மருத்துவ சிகிச்சை மற்றும் பெரிடோனியல் டயாலிசிஸ் போன்ற சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் திருப்பத்தூா் மாவட்டத்தில் மக்கள் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இது நாள் வரை திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 2,185 நபா்களுக்கும், கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் 9,837 நபா்களுக்கும், ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 12,450 நபா்களுக்கும் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 7,160 நபா்களுக்கும், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் 8,065 நபா்களுக்கும், மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் 19,441 நபா்களுக்கும், திருப்பத்தூா் நகராட்சியில் 645 நபா்களுக்கும், வாணியம்பாடி நகராட்சியில் 1,265 நபா்களுக்கும், ஆம்பூா் நகராட்சியில் 2,484 நபா்களுக்கும் என 6 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சிகளில் 63,531 போ் மருத்துவம் பெற்று பயன் பெற்றுள்ளனா். மேலும் 3 லட்சம் நபா்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT