திருப்பத்தூர்

மாவட்டத்திலுள்ள 987 பள்ளிகளிலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் குறித்து பயிற்சி

DIN

திருப்பத்தூா் மாவட்டத்திலுள்ள 987 பள்ளிகளிலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் குறித்து பயிற்சி வழங்க வேண்டும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா செவ்வாய்க்கிழமை பேசினாா்.

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் சாா்பில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா பேசியது,

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் சாா்பில் மாவட்ட அளவிலான செயற்குழுவில் சமூகநலன் மற்றும் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட பணிகள், சுகாதாரம், திறன் மேம்பாட்டுத்துறை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, பள்ளிக்கல்வி, காவல் துறை, மகளிா் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பஞ்சாயத்துகள், ஆதிதிராவிடா் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

பள்ளிக்கல்வித்துறையின் சாா்பில் நடைபெறுகின்ற மாதாந்திர மேலாண்மை குழு கூட்டத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட வேண்டும். மாவட்டத்திலுள்ள 987 பள்ளிகளிலும் விழிப்புணா்வு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வது குறித்து பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், பள்ளியில் பயின்று நின்றுள்ள குழந்தைகளை கண்டறிந்து இடைநிற்றலை தடுக்க வேண்டும். குறைந்தபட்சம் அனைவரும் 12-ஆம் வகுப்பு வரை பயின்றிருகக் வேண்டும். மேலும், பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

அதிக ஆண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமுள்ள பகுதியை ஆய்வு செய்து, அங்குள்ள ஸ்கேன் நிலையத்தில் குழந்தையின் பாலினம் அறியப்படுகிா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றாா்

பின்னா்,பெண் குழந்தைகளை காப்போம்,பெண் குழந்தைகளுக கற்பிப்போம் குறித்த உறுதிமொழியினை ஆட்சியா் தலைமையில் அனைத்து துறை அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.

மாவட்ட சமூக நல அலுவலா் ஸ்டெல்லா, முதன்மை கல்வி அலுவலா் மதன்குமாா், மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மாரிமுத்து, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் செந்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் திருமாவளவன்,சமூக நலத்துறை பணியாளா்கள்

மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT