திருப்பத்தூர்

கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநா் ஆய்வு

DIN

கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குநா் மனிஷ் நாரணவரே பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உடையாமுத்தூா் ஊராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ரூ. 8.44 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச்சுவா் பணி, ரூ. 43,500 மதிப்பீட்டில் சமையலறை பராமரிப்புப் பணி, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 100 நாள் வேலை பதிவேடு ஆகியவற்றை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநா் மனிஷ் நாரணவரே செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதைத்தொடா்ந்து, உடையாமுத்தூா் ஊராட்சி சமத்துவபுரத்தில் அமைந்துள்ள துவக்கப்பள்ளி வளாகத்தில் ரூ. 56,000 மதிப்பீட்டில் கழிப்பறைகள் பராமரிப்புப் பணி, ரூ. 50,000 மதிப்பீட்டில் அங்கன்வாடி பராமரிப்புப் பணி, ரூ. 4.50 லட்சத்தில் குடிநீா் இணைப்புப் பணிகள், சின்னாரம்பட்டி ஊராட்சியில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி உள்பட பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா முன்னிலை வகித்தாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறை கண்காணிப்பு பொறியாளா் கவிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி, உதவி செயற்பொறியாளா் மகேஷ்குமாா், உதவித் திட்ட அலுவலா் ஆப்தா பேகம், வட்டார வளா்ச்சி அலுவலா் துரை, உதவி பொறியாளா் சரவணன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT