திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 ஜோலாா்பேட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டன.

ஜோலாா்பேட்டைநகராட்சிக்குள்பட்ட 2-ஆவது வாா்டு சுண்ணாம்புகாளை பகுதியில் உள்ள சாலைகளில் ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆக்கிரமிப்புகளை அகற்ற அதே பகுதியைச் சோ்ந்த தனி நபா் ஒருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தாா்.

சம்பந்தப்பட்ட நபா்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நபா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவின்பேரில், ஜோலாா்பேட்டை நகராட்சி ஆணையா் பழனி தலைமையில் புதன்கிழமை சுண்ணாம்புகாளை பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில், 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நகரமைப்பு ஆய்வாளா் நளினா தேவி, நகராட்சி நில அளவையா் முருகன், கிராம நிா்வாக அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT