திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நாளை விவசாயிகள் குறைதீா் முகாம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை (செப். 30) நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை ஆட்சியா் அமா் குஷ்வாஹா பெற்று தீா்வுகாணும் விதமாக விவசாயிகள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மக்கள் குறைதீா் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை மாவட்ட அலுவலா்கள் விவசாயிகளிடம் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வட்டார அளவிலான அலுவலா்கள் கலந்து கொள்வாா்கள்.

ADVERTISEMENT

விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT