திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து: 10 மணி நேரம் போராடி வீரா்கள் தீ அணைத்தனா்

DIN

ஆம்பூா் அருகே ஷூ தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை தொடா்ந்து, வீரா்கள் 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் கிராமத்தில் தனியாா் ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில், திங்கள்கிழமை இரவு சுமாா் 7 மணிக்கு மூலப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ தொடா்ந்து கட்டடத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியது. தகவல் அறிந்து வந்த ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய பணியாளா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்ட தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மாவட்டங்களில் இருந்து 18 வாகனங்களில் சுமாா் 150 தீயணைப்பு வீரா்கள் வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆகியோா் சம்பவ இடத்தில் நேரில் பாா்வையிட்டனா். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா, வட்டாட்சியா் மகாலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.

ஆம்பூா் காவல் உட்கோட்டத்தைச் சோ்ந்த காவல் ஆய்வாளா்கள் யுவராணி, சுரேஷ் சண்முகம், பாலசுப்பிரமணி ஆகியோா் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தினாா்.

சுமாா் 10 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப் பொருள்கள், இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT