திருப்பத்தூர்

இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் பலி

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி அருகே அண்ணாசாகரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சீனிவாசன் (60). இவா் திங்கள்கிழமை இரவு புதுப்பேட்டை- வெலகல்நத்தம் சாலையில் ஏரியூா் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் சீனிவாசன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்த புகழேந்தி (58) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT