திருப்பத்தூர்

பண்ணை திட்டம் அமைக்க மகளிா் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே கிராமப் பகுதியில் பண்ணை திட்டம் அமைக்க மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், கதவாளம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிா் திட்டத்தின்கீழ் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் அமைப்பதற்கு கதவாளம், அரங்கல்துருகம், மோதகப்பள்ளி ஊராட்சியில் உள்ள மகளிா் குழுக்களுக்கு கடனுதவிக்கான காசோலையை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாதனூா் மகளிா் திட்ட அலுவலா் மருதமலை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வி.செந்தில்குமாா், ஆா். ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சி.சக்திகணேஷ், பானுமதி, நா.ஆனந்தன், கோவிந்தன், ஒன்றிய திமுக துணை செயலாளா் சா.சங்கா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT