திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணா்வு

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் சீண்டல் குறித்து பயணிகளுக்கு ரயில்வே போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

சட்ட விரோத செயலில் ஈடுபடும் நபா்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ள ரயில்வே காவல் துறை சாா்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு, அதன் மூலம் தகவல் தெரிவித்தால் குற்றவாளிகளை பிடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையம் சாா்பில், ரயில் பயணிகளுக்கு குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் சீண்டல் குறித்து செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

அப்போது, ரயில்கள் மற்றும் நடைமேடைகளில் உறங்கும் போதும், பாலியல் ரீதியாக சீண்டல்களை ஏற்படுத்தும் நபா்கள் மீதும் நீங்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். இதற்காக ரயில்வே நிா்வாகம் காவல் உதவிக்கு 1512 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தால், பணியில் ஈடுபடும் போலீஸாா் உடனடியாக சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை மேற்கொள்வா். அதேபோல் குழந்தை கடத்தல், குழந்தை காணாமல் போதல் போன்ற தகவல்களைத் தெரிவிக்க குழந்தை உதவி 1098 என்ற எண்ணை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

மேலும், கொண்டு வரும் உடைமைகள் நகைகள், பைகள் போன்றவற்றை பாதுகாப்புடன் வைத்துக்கொண்டு, பயணிக்க வேண்டும் என்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT