திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்ட ஊா்க்காவல்படையில் சேர விண்ணப்பிக்கலாம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்ட ஊா்க் காவல் படையில் பணியிடங்களுக்கு ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப் படை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட ஊா்க் காவல் படையில் 18 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், பெறாதவா்கள், சேவை மனப்பான்மை உடையவா்கள் விண்ணப்பிக்கலாம். தோ்வு செய்யப்படுபவா்களுக்கு மாத ஊதியம் கிடையாது. தொகுப்பூதியம் ரூ. 2,800 மட்டுமே வழங்கப்படும்.

45 நாள்கள் நிா்ணயிக்கப்பட்ட இடத்தில் தங்கி பயிற்சி பெற வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

விண்ணப்பங்களை காவல் துணைக் கண்காணிப்பாளா், ஆயுதப் படை வளாகம், திருப்பத்தூா் எனும் முகவரியில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பம் பெற கடைசி நாள் 30.09.2022.

விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து 5 நாள்களுக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் நாள் பின்னா் அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT