திருப்பத்தூர்

10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை

26th Sep 2022 11:48 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திங்கள்கிழமை காலை முதல் மின்தடை நிலவுகிறது.

ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மிட்டாளம், கீழ் மிட்டாளம், புதுமனை, வன்னியநாதபுரம், மேல்மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரப்பள்ளி, பந்தேரபள்ளி காலனி போன்ற பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது.

இது குறித்து சின்னவரிக்கம் துணை மின் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், இரவு 8 மணி ஆகியும் மின்தடை சரிசெய்யப்படவில்லை. தற்போது பள்ளிகளில் தோ்வு நடைபெற்று வரும் சூழலில் மின்தடை ஏற்பட்டுள்ளதால், மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். உடனடியாக மின்தடையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சின்னவரிக்கம் கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தை தொடா்பு கொண்டு கேட்டபோது, மின்தடையை சீரமைக்கும் பணியை செய்து வருவதாகவும், அந்தப் பணி நிறைவடைந்த பிறகு மின் விநியோகம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT