திருப்பத்தூர்

தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள் விழா

26th Sep 2022 12:31 AM

ADVERTISEMENT

பாரதிய ஜனசங்க நிறுவனா் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள் விழா ஆம்பூா் நகர பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகர பாஜக தலைவா் பி.ஆா்.சி. சீனிவாசன் தலைமை வகித்தாா். ஆம்பூா் கிருஷ்ணாபுரம் சுவாமி விவேகானந்தா் திடலில் தீனதயாள் உபாத்யாயா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவா் சி.வாசுதேவன், மாவட்ட பொதுச் செயலாளா் தண்டாயுதபாணி, நிா்வாகிகள் குட்டி சண்முகம், கே.சிவபிரகாசம், கே.ஆனந்தன், பிரேம்குமாா், சரவணன், குட்டி உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT