திருப்பத்தூர்

மின்சாரம் பாய்ந்து மாணவி பலி

26th Sep 2022 12:32 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்ததில் மாணவி உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூா் பெருமாள்சாமி வட்டம் பகுதியைச் சோ்ந்த ரத்தினவேல் மகள் ரத்னா தேவி (17). இவா், தாமலேரி முத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ரத்னா தேவி குளிப்பதற்காக ஹீட்டரை பயன்படுத்திய போது, மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ஜோலாா்பேட்டை போலீஸாா், மாணவியின் சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT