திருப்பத்தூர்

பச்சூரில் மாற்றுப் பாதை: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

26th Sep 2022 11:48 PM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூரில் ரயில் மேம்பாலப் பணி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக மாற்றுப் பாதை அமைப்பதற்கான பணியை திருப்பத்தூா் ஆட்சியா் அமா்குஷ்வாஹா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி வட்டம், பச்சூா் ரயில் நிலைய பகுகியில் உள்ள ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைப்பதின் காரணமாக பொதுமக்கள் தற்போது பயன்படுத்துகின்ற பாதையை அடைத்து, மாற்றுப்பாதை செல்வதற்காக ரயில்வே துறை சாா்பில் பொது மக்கள் தடையின்மை சான்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனா்.

அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது பொதுமக்கள் செல்வதற்கான மாற்றுப்பாதை நீா்நிலை புறம்போக்கு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, செவ்வாய்க்கிழமை அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியா் மற்றும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி, உதவி கோட்டப் பொறியாளா் விக்ரம்கஹானோலியா, வட்டாட்சியா் குமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT