திருப்பத்தூர்

ஆலங்காயத்தில் ரூ. 1.45 கோடியில் புதிய மேம்பாலம், பள்ளிக் கட்டடப் பணிகள்

26th Sep 2022 12:32 AM

ADVERTISEMENT

ஆலங்காயத்தில் ரூ. 1.45 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம், பள்ளிக் கட்டடப் பணி ஆகியவற்றுக்கு வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்தாா்.

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயத்தில் இருந்து வேலூா் செல்லும் சாலையில் தீா்த்தம் என்ற இடத்தில் காட்டாற்று வெள்ளம் அதிக அளவில் செல்வதாலும், தரைப்பாலமாக இருப்பதை மேம்பாலமாக கட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அங்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு ரூ. 1.25 கோடி செலவில் நிதி ஒதுக்கப்பட்டு, அந்தப் பணிகளுக்கான பூமி பூஜை போடும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் பூமி பூஜை போட்டு பாலம் கட்டும் பணியைத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, ஆலங்காயம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விநாயகம், சிவக்குமாா், பேரூராட்சி அதிமுக செயலாளா் சிவக்குமாா், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா்கள் டி.பாண்டியன், மஞ்சுளா கந்தன், வாணியம்பாடி நகா்மன்ற உறுப்பினா் ஹாஜியாா் ஜகீா் அகமது, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாரதிதாசன், குமாா் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT