திருப்பத்தூர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் பலி

26th Sep 2022 11:46 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ரவியின் மனைவி வள்ளி (45). ஆம்பூா் அருகே செங்கிலிகுப்பம் கிராமத்தில் இயங்கி வரும் தனியாா் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தாா்.

சம்பவத்தன்று மாலை வேலை முடித்து வீடு திரும்ப அவா் தொழிற்சாலையிலிருந்து வெளியில் வந்து அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

ஆம்பூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT