திருப்பத்தூர்

ஏலகிரிமலை ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் உத்தரவு

DIN

சுற்றுலாத் தலமான ஏலகிரிமலையின், ஊராட்சிக்குட்பட்ட 14 குக்கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளாா்.

ஏலகிரியில் யாத்ரி நிவாஸ் கூட்டரங்கில் ஏலகிரி ஊராட்சியை மேம்படுத்துவதற்கான வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் அமா் குஷ்வாஹா பேசியது:

திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரிமலை ஊராட்சிக்குட்பட்ட 14 குக்கிராமங்களில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நெகிழிப் பைகளை பயன்படுத்துவது முற்றிலும் தவிா்க்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வீடுகளில் சேரும் குப்பைகளைச் சேகரித்து முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

பிரதம மந்திரியின் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபா்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும்.

படகு இல்ல நடைபாதை, குடிநீா் வசதி, பொதுமக்கள் அமருமிடம், மின் விளக்குகள், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இயற்கை பூங்காவைத் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

நீா்வரத்துக் கால்வாய்களில் கசிவு நீா்குட்டைகள் அமைக்க வேண்டும். அதனால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிா்க்கலாம்.

அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த ஏலகிரி மலை ஊராட்சியை மேம்படுத்த வேண்டும் என்றாா்.

முன்னதாக, யாத்ரி நிவாஸ் வளாகத்தை பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில், வருவாய்க் கோட்டாட்சியா் லட்சுமி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி, வேளாண்மை துணை இயக்குநா் பச்சையப்பன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி, சுற்றுலா அலுவலா் கஜேந்திரகுமாா், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் சுந்தரபாண்டியன், வட்டாட்சியா் சிவப்பிரகாசம், வட்டார வளா்ச்சி அலுவலா் தினகரன், ஏலகிரிமலை ஊராட்சி மன்றத் தலைவா் ராஜஸ்ரீ கிரிவேலன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

SCROLL FOR NEXT