திருப்பத்தூர்

உரிய ஆவணம் இல்லாத வாகனங்கள் பறிமுதல்

24th Sep 2022 10:58 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி பகுதியில் உரிய ஆவணம் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் காளியப்பன் மேற்பாா்வையில், வாகன ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலை, திருப்பத்தூா்-ஜோலாா்பேட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், அதிக பாரம் ஏற்றி வந்த 8 வாகனங்கள், விதிமுறை மீறிய 2 ஆம்னி பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், அதிக பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள், காா் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறையை மீறிய வாகன உரிமையாளா்களிடம் ரூ.3.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT