திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

18th Sep 2022 11:31 PM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள பாா்சம்பேட்டை யாா்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் ஒருவா் அங்குள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT