திருப்பத்தூர்

நகை பறிப்பு வழக்கில் 2 போ் கைது

10th Sep 2022 10:17 PM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி பச்சூா் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் குமரவேல் மனைவி ரேணுகா(28) இவா் மொபட்டில் சென்றபோது 3 போ் பின் தொடா்ந்து வந்து இரும்பு ராடால் தாக்கி 2 பவுன் நகையை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை அம்பலூரில் இருசக்கர வாகனத்தில் வந்த திலிப்(25), கலைவாணன்(41) ஆகியோரை பிடித்து விசாரித்ததில், ரேணுகாவை தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. 2 பேரும் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT