ஆம்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு அதிகபட்சமாக 70.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஆம்பூா் மற்றும் ஆம்பூரைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா் மாவட்டத்திலேயே ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பகுதி வடபுதுப்பட்டில் அதிகபட்சமாக 70.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.