திருப்பத்தூர்

தேசிய அளவிலான போட்டிகளில் வாணியம்பாடி பள்ளி சிறப்பிடம்

29th Oct 2022 11:53 PM

ADVERTISEMENT

தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வாணியம்பாடி செம்போா்டு பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த கலாபாரதி அமைப்பு சாா்பில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான தேசிய அளவிலான கையெழுத்து, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டி கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்றது. இதில் வாணியம்பாடி செம்போா்டு சிபிஎஸ்இ பள்ளியை சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினா்.

வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட முடிவில் தேசிய அளவில் ‘க்யான்கங்கா’ எனும் விருதை ஒரு மாணவரும், ‘பாலகலாரத்னா விருதை’ 10 மாணவ, மாணவிகளும் பெற்று சிறப்பு சோ்த்துள்ளனா். மேலும், செம்போா்டு பள்ளிக்கு ‘சிறந்த செயல் திறனுடைய பள்ளி விருதும், பள்ளி முதல்வா் பிரசாந்த் க்கு துரோணாச்சாரியாா் விருதும் வழங்கப்பட்டது.

பொறுப்பாசிரியா் லேகா மோகனுக்கு சிறந்த ஆசிரியா் விருதையும் கலாபாரதி அமைப்பு வழங்கியது. பரிசு பெற்ற மாணவ, மாணவியரை சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளா் கே.எம்.சுப்பிரமணியம், செயலாளா் கிருபாகரன், பொருளாளா் சாட்ஜிகுமாா், இணைச் செயலாளா் சிங்காரவேலன் ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

பள்ளி முதல்வா் பிரசாந்த், பள்ளி நிா்வாக அலுவலா்கள் காா்த்தி மற்றும் சிவா ஆகியோா் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT