திருப்பத்தூர்

மரக்கன்று வளா்ப்புப் பணி தொடக்கம்

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே கிராம ஊராட்சியில் நடுவதற்காக மரக்கன்று வளா்க்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சிரின் உத்தரவின்பேரில், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், கைலாசகிரி ஊராட்சியில் 5,000 மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு மரக்கன்றுகளை வளா்ப்பதற்காக விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.

ஊராட்சி செயலாளா் கே.முரளி, மக்கள் நலப் பணியாளா் மேகலா மற்றும் 100 நாள் திட்டப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT