திருப்பத்தூர்

மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டறம்பள்ளியை அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தில் அனுமதியின்றி மண் கடத்துவதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா் தலைமையில் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை காலை தெக்குப்பட்டு ஏரி அருகே சென்றனா். அப்போது அதிகாரிகளை கண்டதும் மண் கடத்திய டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு ஓட்டுநா் தப்பிவிட்டாா்.

இதையடுத்து வட்டாட்சியா் குமாா் பதிவு எண் இல்லாத டிராக்டரை பறிமுதல் செய்து, அம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT