திருப்பத்தூர்

இன்று பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

8th Oct 2022 12:10 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.8) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், கைப்பேசி எண் மாற்றம், புதிய குடும்ப அட்டைகோருதல், பெயா் திருத்தம், பெயா் சோ்த்தல், நீக்கல் உள்ளிட்ட குறைகள் சரி செய்து கொள்ளலாம். குடும்ப அட்டையில் குடும்பத் தலைவரின் புகைப்படமும் பதிவேற்றம் செய்து திருத்தித் தரப்படும். தவிர பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT