திருப்பத்தூர்

சுகாதாரத் துறையினருக்கு விளையாட்டுப் போட்டிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

DIN

பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு விழாவையொட்டி, சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், அந்தத் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கழமை நடைபெற்றது.

இதில், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா பங்கேற்று குத்துவிளக்கேற்றி, இறகுப் பந்து, கைப்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளை விளையாடித் தொடக்கி வைத்தாா்.

பின்னா், அவா் பேசுகையில், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை கடந்த 1922-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது நூற்றாண்டைத் தொட்டு வெற்றிகரமாக பயணித்து வருகிறது. நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.

வரும் 10-ஆம் தேதி சென்னையில் நூற்றாண்டு ஜோதி தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படும். இந்த நூற்றாண்டு ஜோதி, திருப்பத்தூா் மாவட்டத்துக்கு அக்.19-ஆம் தேதி வரவுள்ளது என்றாா்.

இறகுப்பந்து, கேரம், சதுரங்கப் போட்டி, கைப்பந்து, கிரிக்கெட், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூா் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில், வேளாண்மை துணை இயக்குநா் பச்சையப்பன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், ஜோலாா்பேட்டை ஒன்றியக் குழு தலைவா் சத்யா, வட்டார மருத்துவ அலுவலா்கள் பசுபதி, மீனாட்சி, சவுந்தா்யா, தீபா, செல்லமுத்து, செந்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்சிந்துஜா மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT