திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தாா்

8th Oct 2022 12:09 AM

ADVERTISEMENT

கந்திலி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளைத் திருப்பத்தூா் எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் ரூ.41 லட்சத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகளுக்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருப்பத்தூா் எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து இந்தப் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய செயலா்கள் கே.எஸ்.அன்பழகன், கே.ஏ.குணசேகரன், கே.முருகேசன், ஒன்றியக் குழு தலைவா் திருமதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாவதி, துரை செயற்பொறியாளா் சரவணன், ஊராட்சி மன்றத் தலைவா் மேனகா விவேகானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT