திருப்பத்தூர்

பாமக நிா்வாகிகள் கூட்டம்

8th Oct 2022 12:11 AM

ADVERTISEMENT

 ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக நிா்வாகிகள் கூட்டம் அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் அ.ம.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட செயலா் க.சரவணன், நிா்வாகிகள் தீனதயாளன், சக்கரவா்த்தி, பஞ்சாட்சரம், சுப்பிரமணி, மணி, உமாமகேஸ்வரி, திருமால், கோ.ஏழுமலை, சி.ஜி.ராமசாமி, ஜெகந்நாதன், காா்த்திக் ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.9) கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது, சென்னையில் நடைபெறும் மராத்தான் போட்டியில் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT