திருப்பத்தூர்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி

8th Oct 2022 12:09 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

மாதனூா் ஒன்றியம், காரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கோபால் (60). இவா், வெள்ளிக்கிழமை காட்டுவெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள முனிரத்தினம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்துக்குச் சென்றாா். அங்குள்ள கிணற்றின் அருகே சென்றபோது, கால் தவறி அதில் விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT