திருப்பத்தூர்

‘ஜல்ஜீவன் மிஷன்’ திட்டம் மூலம் குடிநீா் வழங்கும் பணி; திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

DIN

 திருப்பத்தூா் மாவட்டத்தில் ‘ஜல்ஜீவன் மிஷன்’ திட்டத்தின் மூலம் வீடுதோறும் குடிநீா் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் மூலம் அனைத்து ஊரக குடியிருப்புகளுக்கும் வீடுதோறும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் மூலம் 2020-2021-ஆம் ஆண்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் 31 கிராம ஊராட்சிகள் (திருப்பத்தூா் - 4, ஜோலாா்பேட்டை - 12, கந்திலி - 3, நாட்டறம்பள்ளி - 4, மாதனூா் - 5, ஆலங்காயம் - 3) தோ்வு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீா் குழாய் இணைப்புக்கு பொதுமக்கள் பங்குத் தொகையாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் குடியிருப்புகள் அமைந்த சிறு கிராமங்களில் ரூ.700, பொதுப் பிரிவு குடியிருப்பு சிறு கிராமங்களில் ரூ.1,400 செலுத்தப்பட வேண்டும்.

இந்தத் திட்டம் மூலம் பயனடைந்தவா்கள் இதுநாள் வரை பங்குத் தொகையைச் செலுத்தாதவா்கள், அதற்கான தொகையை தங்களின் ஊராட்சியில் உள்ள ஊராட்சிக் கணக்கில் செலுத்தி, அதற்கான ஒப்புதல் சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் 49 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு வீடுதோறும் குடிநீா் வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.

எனவே, இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சியில் உள்ள பயனாளிகள் தங்களுக்கான பொதுமக்கள் பங்குத் தொகையை கிராம ஊராட்சியில் முன்கூட்டியே செலுத்தி, அதற்கான ஒப்புதலை பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT