திருப்பத்தூர்

தேசிய ஊரக வேலை: பதிவேட்டை சரிவர பராமரிக்காத இருவா் பணியிடை நீக்கம்

7th Oct 2022 12:25 AM

ADVERTISEMENT

மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வருகைப் பதிவேட்டை சரியாகப் பராமரிக்காத பணியாளா்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பாலூா் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களின் வருகைப் பதிவேட்டை பணித் தளத்தில் வைத்து பராமரிக்காதது ஆய்வில் தெரிய வந்தது.

இதையடுத்து, ஊராட்சி செயலா் முரளி, பணித் தள பொறுப்பாளா் திவ்யா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT