திருப்பத்தூர்

‘மாடுகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதன் மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்’

DIN

 மாடுகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதன் மூலமாக நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் அண்மைக் காலமாக மாடுகளுக்கு தோல் கழலை நோய் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கந்திலி, ஆலங்காயம், கதவாளம் ஆகிய பகுதிகளில் மாடுகளுக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நோய் பிற மாநிலங்களில் இருந்து மாடுகள் சந்தைக்காக வருவதில் மூலமாகப் பரவி வருகிறது.

மாடுகளுக்கு அதிக காய்ச்சல், உடல் முழுவதும் சிறு கட்டிகள், கால் வீக்கம், பால் உற்பத்தி குறைதல், சினையுற்ற மாடுகளில் கருச்சிதைவு போன்றவை ஏற்படுகின்றன.

இறப்பு இல்லாவிட்டாலும், அதிக பொருளாதார நஷ்டத்தை ஏற்படுகிறது. இந்த நோய் ஈ மற்றும் கொசுக்களின் மூலம் வெகுவாகப் பரவக் கூடியது.

எனவே, மாடுகள் தங்கும் கொட்டகையில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாகவும், மாடுகளில் ஈ, கொசு கடியைத் தவிா்க்க மேல் மருந்துகள் தெளிப்பதன் மூலமாகவும், நோயுற்ற மாடுகளை தனிமைப்படுத்தி மேய்ச்சலுக்கு அனுப்பாமல், சிகிச்சையளிப்பதன் மூலமாகவும் நோய் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

நோயுற்ற மாடுகளுக்கு வெற்றிலை, மிளகு, உப்பு மற்றும் வெல்லம் தலா 10 கிராம் எடுத்து ஒரு நாளைக்கு மூன்று முறை வயிற்றுக்குள்ளும், வெளிப்பகுதியில் கட்டிகள் உடைந்து புண்கள் ஏற்பட்டால் புண்களுக்கு மருதாணி இலை, வேப்பிலை, குப்பைமேனி இலை, மஞ்சள் தூள் ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து அரைத்து அத்துடன் வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் சோ்த்து சூடுபடுத்தி சூடாறிய பின்னா், கற்பூரம் சோ்த்து பயன்படுத்த வேண்டும்.

கூடுதல் ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகவும். மேலும், மண்டல இணை இயக்குநா் மற்றும் உதவி இயக்குநா், கால்நடை பராமரிப்புத் துறை,திருப்பத்தூா், கைப்பேசி எண்கள்-94450 01131, 94450 01158 மூலம் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

SCROLL FOR NEXT