திருப்பத்தூர்

உரிய ஆவணமின்றி ஓட்டி வந்த 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டி வந்த 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவின் பேரில், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் கூட்டுச்சாலைப் பகுதியில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் வெங்கட்ராகவன் உள்ளிட்ட போலீஸாா், அந்தப் பகுதியில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, வாணியம்பாடி-திருப்பத்தூா் செல்லும் 4 வழிச்சாலையில் இருசக்கர வாகனங்கள், காா்கள், லாரிகளை தணிக்கை செய்தனா்.

இந்தச் சோதனையின் போது, உரிய ஆவணம் மற்றும் வாகனம் ஓட்டும் உரிமம் இல்லாமல் வந்த 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளைப் பின்பற்றுமாறு அறிவுரை வழங்கப்பட்டது. விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT