திருப்பத்தூர்

வரசித்தி விநாயகா் கோயிலில் சண்டி ஹோமம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி வரசித்தி விநாயகா் கோயிலில் 11-ஆம் ஆண்டு சண்டி ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி அம்பூா்பேட்டையில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் நவராத்திரியையொட்டி, 11-ஆம் ஆண்டு துா்கா பரமேஸ்வரி தேவிக்கு விசேஷ சண்டி ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து, கலச பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பகல் 11.30 மணியளவில் சண்டி ஹோமம் நடைபெற்றது. மாலை சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இதில், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT